இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 டிசம்பர், 2017

?

பாரதி புரட்சிகளை
நகலெடுப்பேனோ?
வள்ளுவன் மறையை
மனனம் செய்வேனோ?
பாட்டி ஒளவையை
பின்தொடர்வேனோ?
இல்லை
புதிதாய் ஒரு விதையாய்
நான் முளைப்பேனோ?
கதிராய் முற்றி வெடிப்பேனோ?

செவ்வாய், 21 நவம்பர், 2017

முதல் முத்தம்

பெற்றுக்கொண்ட முதல் பரிசு
இன்னும் கன்னக் குழியில்
கிடக்குதடி

நினைவுகள் தட்டும்போது
கை தடவி பார்குதடி

பார்பதற்காய்
அடிக்கடி கண்கள்
கிழக்கு மேற்காய் புரளுதடி

வியாழன், 9 நவம்பர், 2017

கடன்காரி

அடியே கடன்காரி
எனக்கு கிடைக்கவேண்டிய
அவள்
பட்டுத் தெறிக்கும்
எச்சில் துளியையும்
இதழ் பதிப்பையும்
நீ வேண்டுகிறாயே

வெள்ளி, 3 நவம்பர், 2017

கார்மேகம்

போர் மேகம் சூழ்ந்தபோதே
பீரங்கி மழையில்
நனைந்தோம்  
இதுவென்ன கார்மேகம்
பேயத் தான் முடியும்      
மழை

புதன், 1 நவம்பர், 2017

அரசியல் கைதிகள்

புரட்சிகள் போராட்டங்கள் எங்கு நிகழ்கிறதோ அங்கு உருவானவர்கலே அரசியற் கைதிகள்.  அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோரென கைது செய்து சிறைகளில் அடைக்கப்பட்டோரே அரசியற் கைதிகள் என வரைமுறையிருப்பினும் உலகில் இவர்களுக்கான சரியான வரைமுறையினை இன்னும் தேடவேண்டியே உள்ளது.

உலகளவில் மியன்மாரின் ஆங்சாங்சூகி   பேசப்பட்ட ஒரு அரசியல் கைதி இவர் 1990-2010 வரையில் மியன்மார் இரானுவத்தினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

ஆங்சாங்சூகி
ஆங்சாங்சூகி

                                       https://en.wikipedia.org/wiki/Aung_San_Suu_Kyi


பாகிஸ்தான் முன்னாள் ஐனாதிபதி பெனாசிர்பூட்டோ முகமட்சியா உல்கக் எனும் இரானுவ ஆட்சியாளரால்  கைது செய்யப்பட்டு 4 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெனாசிர்பூட்டோ
https://en.wikipedia.org/wiki/Benazir_Bhutto 



மகாத்மா காந்தி நெல்சன் மண்டேலா ஆகியோர் பிரித்தானியர் ஆட்சி காலத்தில் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டனர்.

நெல்சன் மண்டேலா 1963- 1990 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.
பிறேசிலின் முன்னாள் ஐனாதிபதி டில்மா றொசெவ் 1970-1973 வரை அந் நாட்டு இரானுவ ஆட்சியாளரால் சிறையில் அடைக்கப்பட்டார்.

எம்மா கோல்ட்மான் ஜோன் மைக்லேன்,பேர்ரென்ட் றசெல் போன்றோர் 1ம் உலக போரில் கைது செய்யப்பட்டனர். https://en.wikipedia.org/wiki/World_War_I

லியோ எக்ஸியாபாபோ 1980 இல் ஐனானாயக ஆட்சிக்காக போராடியமையினால் சின அரசாங்கத்தினரால் கைது செய்யப்பட்டார். https://en.wikipedia.org/wiki/China

சோவியத்யூனியன் அமெரிக்கா (ஆபிரிக்கா அமெரிக்கர்கள்) , ஜேர்மன் நாசி போன்றோர் அரசியற் கைதிகளாக அடைக்கப்பட்டனர்.

1700- 1800 களில் பிரிட்டிஸிலிருந்து 1000 கைதிகள் அவுஸ்ரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.



இலங்கையில் யுத்த காலத்தில் ஏராளமான தமிழர்கள் அரசியல் கைதிகளாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் அநேகமானோர்  தென்னிலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றளவிலும் இவர்களின் விடுதலைக்காக  போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. http://srilankabrief.org/tag/political-prisoners/

வெள்ளி, 27 அக்டோபர், 2017

அடிமை

வரலாற்றை பீத்திக்கொண்டே
விணாய்போணோம்
பழமை பேசி புதைந்தேபோனோம்
அண்டி புழங்கி அடிமையானோம்
நம்பி புழங்கி  அநாதையானோம்
அனைத்தும் முடிந்து இன்று
அடக்கமானோம்
என்று உடையும் இந்த
அடிமை விலங்கு

புதன், 25 அக்டோபர், 2017

அரசியல் கைதிகள்

கடந்த நான்கு வாரங்களுக்கு மேலாக நாட்டின் முக்கிய பேசு பொருள் அரசியற் கைதிகளின் விடுதலை கடந்த 4 வாரங்களிற்கு மேலாக தமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழ் அரசியற் கைதிகள் இவர்களுக்கு ஆதரவாக வடக்கு மற்றும் கொழும்பில் பொது அமைப்பினர் பொது மக்கள் மாணவர்கள் வணிகர் சங்கம் போன்றோர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


இதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தமிழ்த் தின நிகழ்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புறக்கணித்திருந்தனர்.
கூட்டமைப்பின் இன்னொரு கிளையினரான தமிழ் மக்கள் பேரவை பிரதி நிதிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் முன்னாள் பாராளுமண்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமசந்திரன் ஜனாதிபதி எமது கோரிக்கைகளை நிறைவேற்றாது யாழ்ப்பாணத்திற்கு வருகை தரமுடியாதென அறிக்கை வெளியிட்டார்.


ஆனால் இவர்களின் ஆர்பாட்டங்கள் அறிவிப்புக்களுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இயல்பாக தமிழ்தின விழாவில் கலந்துகொள்வதற்கு யாழ்ப்பாணம் வருகை தந்தார். தனக்கு எதிராக ஆர்பாட்டம் நடாத்திய ஆர்ப்பாட்ட காரர்களிடம் சென்று உங்கள் பிரச்சினைகளை சொல்லுங்கள் பேசி தீர்கலாம் என அவர்களை ஆறுதல்படுத்திவிட்டு விரைந்தார்.

இது ஒரு புறம் இருக்க யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். கடந்த 19ம் திகதி யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் ஜனாதிபதியினைசந்தித்திருந்தனர்.
இந்த சந்திப்பு முழுமையாக வெற்றியளிக்காததைத் தொடர்ந்து 20ம் திகதி  தொடக்கம்  வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டாள் தமது போராட்டத்தினை மேலும் வலுப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்வோமென யாழ் பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களின் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதேவேளை கடந்த 17ம் திகதி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்றினையும் நடாத்தியிருந்தனர்.
இதன் பின்னர் ஜனாதிபதியினை சந்திக்கும் வாய்ப்பும்வழங்கப்பட்டது.


இதேவேளை கடந்த 19ம் திகதி வடமாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் உட்பட உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உறவினரும் ஜனாதிபதியினை சந்தித்தனர். இந்த சந்திப்பிலும் ஆக்கபூர்வமான பதில்கள்  ஏதும் கிடைக்கவில்லை.

கடந்த 18ம் திகதி பாராளுமண்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரனையின் போது பேசிய எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் அரசு கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டார்.

வவுனியாவில் இடம்பெற்ற வழக்கு விசாரனைகள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டமையினாள் கைதிகளின் அடிப்படை உரிமையான அறிந்து கொள்ளும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இவ்வாறாக தொடர்சியான போராட்டங்கள்,கண்டனங்கள், விவாதங்கள்,ஆர்பாட்டங்கள் நடாத்தப்பட்டும் எமது நியாயமான கோரிக்கைகளுக்கான பதில்கள் கிடைக்காதவிடத்து நாம் எமது போராட்டத்தினை இன்னும் வலுப்படுத்தி வெல்லப் போகின்றோமா? இல்லை காலம் தான் பதில் சொல்ல வேண்டுமென சோர்வடைய போகிறோமா ? இந்த கேள்விகளுக்கான பதில்கள் அடுத்து வரும் நாட்களில் கிடைக்கட்டும்.


?