இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 மே, 2017

மழை

மழை மாதா
வந்துவிட்டாள்
இடி என்னும் பறையோடும்
மின்னல் விளக்கோடும்

வாருங்கள் எல்லோரும்
ஆட்டம் போஆசையடா
அம்மா அடிப்பாலே

உங்கம்மா எங்கம்மா
மழையில் போட்ட
ஆட்டங்கள் அறிவாயா?

நாங்கள் போடும்
ஆட்டங்கள் போதாதென்று
குறைத்து விட்டாள்
மழை மாதா

ஓடி ஒளிக்க
இவள் ஒன்றும்
தோரை இல்லை
நம்மூரின் தேவதை


இவள் மொறைப்பதற்குள்
நனைந்திடு சின்னக்கா

மொறைத்து விட்டாள்
வீட்டிற்கே கப்பலில் தான்
போகவேண்டும் சின்னக்கா

நிவாரண நிதிக்காய்
ஊரெங்கும்
அலைய வேண்டும்
சின்னக்கா

சீக்கிரமாய் வந்துவிடு
சின்னக்கா

வியாழன், 4 மே, 2017

புதுவிதி

உங்கப்பன்
அவைத் தலைவன்
உன் தாத்தன்
முதல் மந்திரி
உங்கண்ணன்
கட்சி தலைவன்

தோழா நீ எம் தலைவன்
எங்கப்பன் தொண்டன்
என் தாத்தன் தொண்டன்
எங்கண்ணன் தொண்டன்

ஒருவேளை
தொண்டன் பரம்பரையோ?
பூட்டிய கதவுகளின்
திறப்புகளை மறந்தோமா? -இல்லை

திறப்புகளை தொலைத்தே
விட்டோம்
வாருங்கள் தோழர்களே
தொலைத்த இடத்தில்
தேடுவதற்கல்ல
புதிதாய் செய்வதற்கு

?