இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 அக்டோபர், 2017

I”d retire if get close to kumbles” record அஸ்வின் சொன்னது என்ன?



இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு வித்திட்ட வீரர்களில் ஒருவர் அஸ்வின் குறிப்பாக இந்தியாவிற்கு வெளியே சுழற் பந்து வீச்சில் கலக்கும் வீரர்களில் அஸ்வினின் இடம் குறிப்பிடத்தக்கது.


நடந்து முடிந்த அவுஸ்ரேலிய தொடர் மற்றும் இலங்கை தொடர்களிலும்; ஓரம் கட்டப்பட்டவர் தற்போது நியூசிலாந்துக்கெதிரான தொடரிலும் ஓரம் கட்டப்பட்டுள்ளார் கங்குலி தலமைப் பொறுப்பிலிருந்த போது கர்பயன்சிங் யுவ்ராஜ் ஆகியோர் அவரின் செல்லப் பிள்ளைகளாக இருந்தனர்.
                   

 டோனி தலைமைப் பொறுப்பபிலிருந்த போது அஸ்வின் ஜடேஜா ஆகியோர் டோனியின் செல்லங்களாக இருந்தனர். அந்த சமயத்தில் டோனி விரும்பினாலும் கர்பயன் சிங்கை தேர்வாரள்கள் ஒதுக்கியிருந்தனர்.

அதே  போன்றதொரு நிலமை தற்போது அஸ்வினை வழைத்துவிட்டது. நேற்றைய தினம் அஸ்வின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நான் கும்ளேயின் சாதனையை முறியடிக்க விரும்பவில்லை” என்பதே ஒரு வீரனின் உச்சக்கட்ட விரக்தியே இந்த வார்தை


இந்திய அணியின் தலமைப் பயிற்சியாளர்களில் ஒருவராக கும்ளே பதவி வகிக்கின்றார். இந்திய அணியின் சுழல் ஜாம்பவான்களில் முதலிடம் இவருக்கே சர்வதேச டெஸ்ட் கிர்க்கெட்டில் அதிக இலக்குகளை வீழ்தியவர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார்.1ம் 2ம் இடங்களை முறையே முரளிதரன் வோர்ன் ஆகியோர் பகிர்கின்றனர்.


கும்ளே இது வரை 618 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார்.
அஸ்வின் 52 போட்டிகளில் 292 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார். சாராசரியாக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார்.

முரளிதரன் 133 போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார். சராசரி ஒரு போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார்.


வோர்ன் 145 போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழத்;தியுள்ளார். சராசரி ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


கும்ளே 132 போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் சராசரியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


கர்பயன் சிங் 103 போட்டிகளில் 417 விக்கெட்டினை வீழத்தியுள்ளார். கர்பயன் சிங் சராசரியாக ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கும்ளேயின் சாதனைகளை தகர்க கூடியவராக கர்பயன் இருந்தாலும் அவர் போடடிகளில் விளையாடுவதே கேள்வி? கர்பயனுக்கு தற்போது 37 வயதாகிவிட்டது. இவருக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை கர்பயன் எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை


தற்போது கும்ளேக்கு அச்சுறுத்தலாக உள்ள வீரர் அஸ்வின்(31) இவரை போட்டிகளில் இடம்பெறாமல் செய்வதன் மூலம் கும்ளேயின் சாதனையை முறியடிக்க முடியாது.


இதே வேகத்துடன் அஸ்வின் இருந்தாள் 100வது போட்டியில் கூட 600 விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்புண்டு.
2011 ம் ஆண்டில் இலங்கைக்கெதிராக முதல் போட்டியை விளையாடிய அஸ்வின் 6 ஆண்டுகளில் 292 விக்கெட்டினை வீழ்தியுள்ளார்.
தற்போது 31 வயதாகின்ற அஸ்வின் இன்னும் 5 வருடங்கள் ஆடினால் 100 போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்புண்டு

ஏனைய நாட்டு வீரர்களிடம் ஒப்பிடும்போது அவுஸ்ரேலியா இந்திய அணிகள் அதிகளவான போட்டிகளில் விளையாடுவதனால் அஸ்வினுக்கு இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சாதனை படைக்க வாய்ப்புண்டு.


அஸ்வின் இன்னும் 2 போட்டிகளில் விளையாடினாள்300 விக்கெட்டுகளை வீழ்திய 3 வது இந்தியராக ஜொலிப்பார். இவற்றை கணக்கு வைத்தே அஸ்வினை ஓரம் கட்டுவதை அறிந்த  அஸ்வின் இவ்வாறான அறிவிப்பைI”d retire if get close to kumbles” record
வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

?