இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 அக்டோபர், 2017

மெர்சல் தீபாவளி விருந்து

தனது தாய் தந்தையை(நித்தியாமேனன் விஜய்) கொண்ற எஸ்ஜே சூர்யாவை பழிவாங்குகிறார் விஜய் இது தான் கதை

இதற்குள் எப்படி ஸ்கோர் பண்ண முடியுமோ அதை செவ்வனே செய்திருக்கிறார் அட்லி.
தலைவா பைரவா போன்று விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு அஸ்திவாரம் போடுகின்ற கதையே மெர்சல்.

அன்மைக்கால நாட்டு நடப்புக்களை எவ்வளவுக்கு புட்டு வைக்கிறார் அட்லி. ஜி.எஸ்.ரி மற்றும் மருத்துவம் சார்ந்த பிரச்சினைகளையும் மும்பை வைத்தியசாலையில் காஸ் சிலின்டர் விநியோக பிரச்சினையால் குழந்தைகள் இறந்ததென நாட்டுநடப்பை படம் முழுக்க இறைத்திருக்கிறார்.

விஜய்யும் அட்லியும் படம் வெளியிடுவதில் சிக்கலை எதிர்நோக்குவோம் என்பதை கட்டாயம்  அறிந்திருப்பார்கள்.

சீமான் ஒரு பேட்டியின் போது ஆளப்போறான் தமிழன் தனக்கான பாடல் என்றார் இதை நிரூபிப்பதை போலவே  விஜய் பேசுகின்ற அரசியல் வசனங்களும் சீமானுக்கானதோ என எண்ண வைக்கிறது. நிச்சயமாக ஒரு துனிச்சலான நாயகனும் இயக்குனரும்

கதைசொல்லும் வித்தையை சங்கரிடத்தில் நன்றாக கற்றுள்ளார் அட்லி. எந்த இடத்திலும் முகம் சுழிக்கின்ற காட்சிகள் இல்லை. போக போக அடுத்து என்ன நடக்கப்போகின்றதென்ற எதிர்பார்பிற்கு பங்சமே இல்லை. ரசிகர்கள் இது தான் நடக்குமென ஊகித்து கொள்ளமுடியாமல் கதையினை தனது சட்டைப் பைக்குள் வைத்துள்ளார் அட்லி.

அவர் அழைத்துச்செல்லும்போது மட்டுமே கதையோடு நம்மால் பயனிக்கமுடிகிறது.

படத்தில் வருகின்ற வசனங்கள் அடுத்து வரும் நாட்களில் சமூக வலைத்தளங்களுக்கும் மீடியாக்களுக்கும் நல்ல தீன்கள்

 முழுக்க விஜய்யை(3) சுற்றியே கதை செல்கிறது.
தற்போது நமக்குள்ள பொறுப்பையும் சொல்லத் தவறவில்லை


sjசூர்யா டாக்டர் அழகான வில்லனாக கலக்கியிருக்கிறார்.
 தமிழ் சினிமாவில் ரகுவரன் பிரகாஸ்ராஜ்ஜிற்கு பிறகு எங்கள் தலைமுறை வில்லன்

சத்யன் மற்றும் சத்தியராஜ்ஜிற்கு பெரியளவில் இடமில்லாவிட்டாலும் தமது எல்லைக்குள் நல்ல ஸ்கோர் செய்துள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ததைப்போல வடிவேலுவின் காமெடிக்கு இடமில்லை விஜய்யுடன் இவர் பயனிக்கிறார்.  விஜய்யின் 5ரூபா டாக்டர் பெயரும் சில இடங்களில் சிரிப்பு வரக் காரனம்

கஜால் அகர்வால் மற்றும் சமந்தாவிற்கு பெரிய இடமில்லை கவர்சி பொம்மைகளாகவும் காட்டவில்லை நித்தியமேனனுக்கு கிடைத்த வாய்ப்பை நண்றாக பயன்படுத்தியுள்ளார்.

துனை நடிகர்களான சரளா, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் என ஒரு திரை பட்டாளமே கலக்கியுள்ளது.

வழமை போலவே விஜய்யின் சண்டை க் காட்சிகளும் நடனமும் அரங்கை அதிர வைக்கிறது.

ராஹ்மானின் பாடல்கள் திரைக்குவெளியில் வரும்போதும் முனுமுனுக்கவைக்கிறது.  மாஸ் காட்சிகள் வரும்போது வருகின்ற இசை இன்னும் கூடுதல் பலமாகவுள்ளது.

எடிட்டர் எந்த காட்சியையும் தூக்கியிருக்கமாட்டார் படம் 3 மணித்தியாலங்கள் வரை செல்கிறது.
காட்சி பொருத்தங்கள் கன கச்சிதமாகவுள்ளது.

தேனான்டாள் பிலிம்ஸினருக்கும் ஏறுமுகமே

மொத்தத்தில் மெர்சல் ஒரு நல்ல படைப்பு
         

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நீங்க விஜய் விசிறியா?

subash சொன்னது…

படம் நல்லா தா இருக்கு

பெயரில்லா சொன்னது…

அடுத்த கட்டம் கட்சி தான்

பெயரில்லா சொன்னது…

நம்ம வடிவேலுவ கவனிக்கலயே அட்லி

பெயரில்லா சொன்னது…

நீங்க விமர்சகரா?

பெயரில்லா சொன்னது…

நல்ல படம் தா

?